Thursday, September 12, 2013

கணபதியே!....

துதிக்கை உடையோனே
நின்னை நித்தமும்
துதி செய்து
மதி வேண்டி
திருவடி பணிந்தேனே.!

சினம் கொள்ளும்
சிறு மனங்களை
அகம் கொள்ளாது
அகம் காண அருள்
புரியும் நாயகனே
விநாயகனே !


இலக்கணமில்லா
இவ்வுல வாழ்க்கையின்
தலைக்கணம் அறுக்கும்
அதிபதியே
கணபதியே !

பரதம் பிடித்த உன் கைகளில்
உடைந்த தந்தம் போல்
இடையில் சிக்கிக்கொள்ள
பாதம் பிடித்தேனே
பாவங்கள்
தொலைத்தேனே  !!!!!!

----சுபசெந்தில்

Tuesday, September 29, 2009

சிறகுகள்
சிதறிக் கிடக்கின்றன
வெளியில் ,..
அவளின் மனச்சிறையிலிருந்து
வெளிவர மனமில்லை
எனக்கு .
வலிகள் விரும்பப்படும்
சிறையில் ....
சுருதி சேர்க்கும் ,
முனகல்கள் கவிதையாகும்
அவளின் ...
உச்சரிப்புகள் - சுபசெந்தில்

Thursday, December 4, 2008

கண்ணாடிச் சுவர்கள்


தீயின் தீண்டலில்
கனிந்துபோன காயங்களின்
வலி தீர
உள்ளங்கையால் நீ
உரசிவிட்டுப் போனதும்
வரலாற்றில் புரியாமல்போன
சிபபாய் கலகத்தின்
பரவல்களாய்
பரந்துசென்றது
என் தேகம் முழுவதும்
உன் உணர்ச்சிகள்….
உன் விரல்களின்
வருடலில் வழிந்த
ஈரத்தின் வேர்கள்
இறுகிப்பிடித்து
இம்சை செய்தது
காயத்தை மட்டுமல்ல….
வலியின் விளிம்பில்
நான்
கலங்கிய கண்களோடு
நீ.
பழகிப்போன ஆறுதல்கள்
ஒரு புறம்
சுவாசத்தை
சல்லடை போடும்
மருந்துகள் மறுபுறம்.
மரணத்தின் மறைபொருளாய்
காரிருள் கருவிழியில்
கசிந்து கொண்டிருக்க….
ஒதுங்கி நிற்கும்
ஒப்பனை முகத்தில்
வெளிச்சம் குறைந்து
கொண்டிருக்க….
எம்பித் துடிக்கும்
என்
நெஞ்சில் அழியாத
ரேகையை பதியவைக்க
விரதமிருக்கும்
உன்
விரல்களுக்கும்
கடைசியாய்
உள்காயத்தின் கனவுகளை
உந்தன் கண்களில்
கலப்படம் செய்யக்
காத்திருக்கும்
எனக்கும்
இடையில்
ஏன் இந்த
”கண்ணாடிச் சுவர்கள்? ”
 

--சுபசெந்தில்.

Sunday, November 9, 2008

அனல்காற்று

வெட்டப்படும்
வேப்ப மரத்தின் வேர்களின்
வலியை
உள்நாக்கில் உணர்த்திவிட்டுச்
செல்லும் காற்று
கசப்போடு ......
நுனிநாக்கில்
நீ
வீசிவிட்டுப் போன
வார்த்தைகளின்
வலியை
அந்த அனல் காற்று
எப்போது உணரும் பசப்போடு
..... யாழினி

Friday, October 24, 2008

கிளைகளின் அசைவில்
கீழே விழும் நிழல் கூட
உன் பிம்பத்தை
கடன் வாங்கி
கீழே விழுகிறது
--- யாழினி